பிறந்தநாளன்று சூர்யா முன்னெடுத்த. புதிய திட்டம் – குவியும் பாராட்டு
நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி அவருடைய ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
அவை எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு திட்டத்தையும் இன்று முதல் நடைமுறைப் படுத்தவிருக்கிறார்களாம்.
தமிழகம் முழுதும் நானூறு அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு கழிவறை கட்டித் தருவதென்றும் கட்டித் தந்து விட்டு வந்துவிடாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதென்றும் முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா.
மாவட்டத்துக்கு பத்துப் பள்ளிகள் வீதம் மொத்தம் நானூறு பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக்கிறார்கள்.
அரசுப்பள்ளிகளுக்கு அத்தியாவசியத் தேவை என்பதை உணர்ந்து அதைச் செயல்படுத்த முனைந்துள்ள சூர்யாவை சம்பந்தப்பட்ட
பள்ளி ஆசிரியர்களும் சமுதாய ஆர்வலர்களும் மனமாரப் பாராட்டுகின்றனர்.











