விஜய்க்கு மட்டுமல்ல ரஜினி, அஜித், சூர்யாவுக்கும் எதிர்ப்பு
நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று விமர்சனம் வந்தது.
தமிழ்த் திரையுலகில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் எல்லா முன்னணி நடிகர்களையும் மருத்துவர் இராமதாசு கண்டித்தார்.
அவை பற்றிய விவரங்கள்…
2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர இருந்த பாபா திரைப்படத்தின் முதன்மை விளம்பரம் நடிகர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் படத்துடன் வெளிவந்திருந்தது. பாபா திரைப்படத்தின் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் இராமதாசு 2002 ஆகஸ்ட் 11 அன்று பூம்புகாரில் நடந்த மாநாட்டில் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு அரசியல் சக்தியாக பார்க்கப்பட்ட அக்காலத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அக்காலத்தில் ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுவதே சவாலாக மாறியது.
அன்புமணி இராமதாசை தலைவராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பு 2010 ஆம் ஆண்டில், நடிகர் அஜித் நடித்த ‘அசல்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்துப் போராடியது. இதனால், தனது படங்களை பின்பற்றி புகைபிடிக்கும் பழக்கத்தை ரசிகர்கள் பின்பற்ற வேண்டாம் என அஜித் கூறினார்.
பசுமைத் தாயகம் அமைப்பு 2002 ஆம் ஆண்டில், நடிகர் சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்தும் போராடியது.











