சினிமா செய்திகள் நடிகர்

உழைப்பில் முன்னேறிய ரசிகருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

யாரும். எதிர்பாராத வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ரசிகர் படை அமைந்திருக்கிறது.

அவரும் அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுடன் படம் எடுத்து மகிழ்கிறார்.

நேற்று சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர், என் நிண்டநாள் கனவு சொந்தஉழைப்பில் லாரி வாங்கி அதில் தலைவர் @Siva_Kartikeyan அண்ணன் படத்தின் பெயரை எழுதவேண்டும் என்ற நிண்டநாள் கனவு இன்று நிறைவேறியது #சீமராஜா ?முயற்சி! முன்னேற்றம்!முதலிடம்!?

என்று ஒரு லாரியில் சீமராஜா என்று பெயர் எழுதியிருக்கும் படத்தை டிவிட்டரில் போட்டிருந்தார்.

அந்த ட்வீட்டைப் பார்த்தவுடன், இன்னும் நிறைய உயரங்கள் தொட வாழ்த்துகள் தம்பி??????

என்று சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

யாரோ ஒரு ரசிகர் ஏதோ செய்கிறார் என்று கடந்து போகாமல் வாழ்த்து சொன்னதால் சிவகார்த்திகேயனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

சம்பந்தப்பட்ட ரசிகர் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் வாழ்த்துக்குப் பிறகு ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts