படத்தின் பெயரை மாற்றாதீர்கள் – விஷால் வேண்டுகோள்
எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நுங்கம்பாக்கம் .
இப்படத்தின் கதை வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார்.
திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன்.
நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மே 21 அன்று நடந்தது.
விழாவில் பேசிய விஷால்..
இந்தப்படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன் ..
ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள் ஏன் பயப்படனும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.
என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்.
இந்த விழாவில் இயக்குனர் விக்ரமன் அஜ்மல் எஸ்.ஏ.சந்திரசேகர் சினேகன் கதிரேசன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.
இயக்குநர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் பேசும் போது…
ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது.
ஜெயிலுக்கு மட்டும் தான் போகல..அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்..
எனக்கு வேற வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும் என்றார்.











