December 9, 2021
சினிமா செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தை எதிர்க்கும் காலா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் கதை மும்பையில் நடப்பது போலப் படமாக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று பெரிய தாதா ஆகிறார் ரஜினி.

அங்குள்ள மக்களுக்காக குறிப்பாகத் தமிழர்களுக்காகப் போராடுகிற வேடத்தில் நடித்திருக்கிறாராம் ரஜினி.

ஒரு கட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளைக் காலி செய்யச் சொல்கிறதாம் அரசாங்கம்.

குடியிருப்பைக் காலி செய்ய மாட்டோம் என்கிற போராட்டத்தை ரஜினி தலைமையேற்று நடத்துவது போலக் காட்சிகள் காலா படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.

மோடியின் தூய்மை இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அக்காட்சிகள் படத்தில் இடம் பெறுமா? நீக்கப்படுமா? என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறதாம்.

Related Posts