சினிமா செய்திகள்

சிக்கலில் 4000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் – காரணம் என்ன?

2025 டிசம்பர் 9-ஆம் தேதி சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு அரசுடன் ஒரு மைல்கல் ஒப்பந்தமான ரூ 4000 கோடி முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம். 
அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறற இந்நிகழ்வு, அககாலகட்டத்தில் பரவலான கவனத்தை ஈர்த்தது.

அப்போது இப்படி ஒரு ஒப்பந்தம் போடலாம் என ஜியோஸ்டார் தமிழுக்கு வழிகாட்டியவர் மகேந்திரன் என்றும் அவர் முன்னாள் ஜியோஸ்டார் ஊழியர், தற்போது நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸில் இணைதயாரிப்பாளர். இவர் மூலமாகவே சென்ற ஆட்சியில் இந்த ஓப்பந்தம் சாத்தியமானது என்று சொல்லப்பட்டது. 

புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது மகேந்திரனுக்குச் சொந்தமான திரைப்பட நிறுவனமான டர்மெரிக் மீடியா என்றும் சொல்லப்பட்டது.

இப்போது விஜய் தலைமையில் புதியஆட்சி அமைந்திருப்பதால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

பொறுப்பேற்ற நாள் முதல், முதலமைச்சர் விஜய் எண்ணற்றோரைச் சந்தித்து வருகிறார். திரைத்துறையினர், தயாரிப்பாளர்கள், ஊடக நிறுவனங்கள் என அணிவகுத்து வருகின்றனர். நடிகராக இருந்தபோது அணுகவே கடினமாக இருந்த அவர், முதலமைச்சரான பின்னர் எளிதில் சந்திக்கக்கூடியவராக மாறியிருக்கிறார். 

அந்தவரிசையில் ஜியோஸ்டார் தமிழ் நிறுவனத்தைச் சேர்ந்தோரும் விஜய்யைச் சந்திக்க முயன்றுள்ளனர்.ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான காரணத்தால் அம்முயற்சி பலிக்கவில்லை என்கிறார்கள்.

அப்படி என்ன காரணம்?

தேர்தல் காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் முதன்மைப் பொறுப்பாளர் பாலா என்பவர் முழுமையான திமுக கட்சிக்காரர் போலவே செயல்பட்டு அனைவரும் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று பரப்புரை செய்திருக்கிறார்.தனது (Instagram) இன்ஸ்டகிராம் பக்கத்தில் திமுகவுக்கு வாக்களிக்குமாறு வெளிப்படையாகப் பரப்புரை செய்திருக்கிறார்.

விஜய் மற்றும் அவருடைய மேலாளர் ஜெகதீஷ் ஆகியோருக்கு இது நன்றாகத் தெரியும் என்பதாலேயே ஹாட் ஸ்டார் குழுவினரை அவர் சந்திக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

4000 கோடி தொகையை, ஐந்தாண்டுகளில் தமிழ் உள்ளடக்கத்தில் முதலீடு செய்வதாக வாக்களித்தது ஜியோ ஹாட் ஸ்டார். 
இப்போது, ஒரு தனிநபரின்  அரசியல் சாய்வின் காரணமாக அது சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறதென்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Related Posts