சினிமா செய்திகள் நடிகை

என்னைப் பற்றி இப்படியொரு வதந்தியா? – காயத்ரி ரகுராம் கோபம்

பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும்புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம். அவர் பாஜகவில் இருக்கிறார்.

ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

நான் கைது செய்யப்பட்டதாக தவறான வதந்தி பரவி இருக்கிறது. கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான் பா.ஜனதா கட்சியில் இருக்கும் காரணத்தால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். எனக்குக் குடும்பம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப் பற்றிய தவறான வதந்தி அவர்களையும் காயப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க இருக்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்குச் சேவை செய்ய நினைத்தேன். ஆனால் அரசியல் அதைச் செய்யவிடாது. மக்கள் உண்மையை ஏற்கத் தயாராக இல்லை. நானும் நம்பிக்கையை இழந்து விட்டேன். இதனால் டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால் இப்போதுவரை அவருடைய ட்விட்டர் தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

Related Posts