September 20, 2026
செய்திக் குறிப்புகள்

அஜித் பாடலை வெளியிடும் யுவன்சங்கர்ராஜா

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் பில்லாபாண்டி. இந்தப் படத்தில் அவர் அஜித் ரசிகராக நடிக்கிறார். பில்லாபாண்டி படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளது.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில்,ஆர்.கே.சுரேஷ் , சாந்தினி, இந்துஜா, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவானன், மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் நடித்திருக்கிறார்.

படத்தொகுப்பு ராஜா முகமது, ஒளிப்பதிவு ஜீவன், இசை இளையவன், எழுத்து எம்.எம்.எஸ்.மூர்த்தி,இயக்கம் ராஜ் சேதுபதி.

இத்திரைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளதாம்.

எனவே, அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக எங்க குல தங்கம், எங்க தல சிங்கம் என்ற பாடலை வெளியிடவிருக்கிறார்கள்.

இதை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிடுகிறார்.

Related Posts