யாத்திசையால் ஏறுமுகம் – நடிகர் சாம்சன் மகிழ்ச்சி
அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் யாத்திசை.பாண்டிய மன்னர்கள் காலத்துக்குக் கதையை அடிப்படையாகக் கொண்ட அந்தப்படத்தில், தேவரடியார்களைக் கவனித்துக்கொள்ளும் கோயில் குருக்கள் வேடத்தில் நடித்திருந்தவர்்சாம்சன்.
அந்த வேடத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்திருக்கும் சாம்சனின் சொந்த ஊர் பாலக்காடு. கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து லயோலாவில் டிப்ளமோ கோர்ஸ் முடித்து விட்டு,திரைப்பட வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.
கிடைத்ததோ சிறு சிறு வேடங்கள்தான். அதில் முக்கியமானது, நாகாவின் அனந்தபுரம் வீடு. இருந்தாலும் சளைக்காமல் பல இயக்குனர்களை சந்தித்து இருக்கிறார்.
இவரது நண்பர் சுரேஷ்குமார், காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். அவர் மூலம் ‘ யாத்திசை’ இயக்குனர் தரணி ராசேந்திரனைச் சந்தித்து இருக்கிறார்.
அதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரிக்கான காஸ்ட்யூம்களை போடச் சொல்லி இருக்கிறார். மிகப் பொருத்தமாக இருக்கவே படப்பிடிப்புக்கு செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருக்கிறார்.
யாத்திசை படம் பார்த்த நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கிறதாம்.
அடுத்து ஆறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறதாம். மலையாளம் தெரியும் என்பதால் சில மலையாளப் பட வாய்ப்புகளும் வந்திருக்கிறதாம்.
இனி அவருக்கு ஏறுமுகம் தான் என்பதால் மனிதர் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.












