சினிமா செய்திகள்

சகலையை இயக்குநராக்கும் சிவகார்த்திகேயன் – புதிய தகவல்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோராஜ்.அதன்பின்,பிளான் பண்ணி பண்ணனும்,ஜோ,ஸ்வீட் ஹார்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.அப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் அவர் இப்போது ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார்.அப்படத்தை, கார்த்திகேயன் எனும் புதிய இயக்குநர் இயக்கவிருக்கிறார்.

இவர், ஹிப்ஹாப் தமிழா ஆதி,தெலுங்கு இயக்குநர் வம்சிபைடிபள்ளி,லோகேஷ் கனகராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

இவர் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் படத்தில்தான் ரியோராஜ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தையும் சிவகார்த்திகேயனே தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தை அவர் தயாரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

அது என்ன காரணம்?

இப்படத்தை இயக்கும் கார்த்திகேயன், சிவகார்த்திகேயனின் சகலை.அதாவது சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியின் தங்கை கணவர்.

இவரை இயக்குநராக அறிமுகப்படுத்தவே இந்தப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இப்படத்தைத் தயாரிப்பதன் மூலம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடிக்கவிருக்கிறார்.ஒன்று, ரியோராஜை அறிமுகப்படுத்தியதற்குப் பலனாக அவர் வெற்றியில் இருக்கும்போது ஒருபடம் தயாரிப்பது,இன்னொன்று, மனைவியின் தங்கை கணவரை இயக்குநராக்குவது.இவ்விரண்டு காரணங்களுக்காகவே இப்படத்தைத் தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts