சினிமா செய்திகள்

இயக்குநர் கவுதம் மேனனுக்கு தொடரும் சோதனை

நரகாசூரன் பட வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், அந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் கவுதம் மேனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால், தமிழ்த் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.அது சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் கவுதம்மேனன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவருடைய ட்விட்டரில்…

முதலில் தங்களை ஏமாற்றியதாக அவருக்கு எதிராகப் புகார் அளித்தோம். பின்னர் இந்த பிரச்சனையை ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் முடிவு செய்தோம். இன்னும் பலர் அவருக்கு இரையாகி வருகிறார்கள். கார்த்திக் நரேன் இந்த விவகாரத்தை தைரியமாக வெளியிட்டிருக்கிறார். அவரால் பாதிக்கப்பட்ட பலரின் பிரச்சனைகள் இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை. அவரது வலையில் இருந்து மற்றவர்களை காப்பாற்ற உதவுங்கள். அவர் ஒரு தந்திரமான நரி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கவுதம்மேனனுக்கு சோதனை தொடருகிறது.

Related Posts