சினிமா செய்திகள் நடிகர்

துல்கர்சல்மான்படத்தின் முதல்பார்வை சொல்வது என்ன?

துல்கர் சல்மானின் 25-வது படம் தமிழ்ப் படமாக அமைந்திருக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

இப்படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு முதல்பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. துல்கர் சல்மான் மற்றும் ரீத்து வர்மா இருவருமே ‘இதய வடிவத்தில்’ கைகளை வைத்திருப்பது போன்று முதல்பார்வையை வடிவமைத்திருக்கிறார்கள்.

புனே மற்றும் கோவா ஆகிய ஊர்களின் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. ஜுன் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில் , ” இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாடல் மனதிற்கு வந்தது. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை” என்றார்.

ஆனால் இந்த் முதல்பார்வையைப் பார்க்கும்போது இருவருக்கும் இடையே காதலை விட மோதல் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

Related Posts