மணிரத்னமும் வெற்றிமாறனும் படமாக்க விரும்பிய கதை – ரத்தசாட்சி பட விவரங்கள்
ஆஹா தமிழ் நிறுவனமும் தயாரிப்பாளர்கள் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரின் மகிழ் மன்றம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ரத்தசாட்சி. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினைத் தழுவி உருவாகியுள்ளது.
இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம்,ஓஏகே சுந்தர், பிரவீன், ஹரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் 9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நவம்பர் 6 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஜாவத் ரியாஸ் பேசியதாவது……
இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். இந்தப் படம் எனது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியது. இந்தப் படத்தை மெருகேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. ஆனால் அது எங்களை எந்த வகையிலும் சோர்வாக்கவில்லை. இந்தப் படத்தில் ஒரு ஆன்மா இருக்கிறது. கதையிலும் இந்த ஆன்மா இருக்கிறது, அது படத்திலும் வந்து இருக்கிறது. அதற்கு தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் தான் காரணம்.படத்தில் 6 பாடல்கள் இருக்கின்றன. அது படத்துடன் ஒன்றிப் போய் இருக்கிறது. அதற்கு சிறப்பான வரிகளும் கிடைத்துள்ளன. இந்தப் படத்தைப் பார்த்து உங்களது ஆதரவைத் தாருங்கள் என்றார்.
படத்தொகுப்பாளர் பிரகாஷ் கருணாநிதி கூறியதாவது…..,
இந்தக் கதையில் ஒரு மனிதநேயம் பேசப்பட்டு இருக்கிறது. ஜெயமோகன் சார் போன்ற சிறந்த எழுத்தாளருடைய கதையைச் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறோம். அதற்குப் பொருத்தமான நடிகர்கள் இந்தப் படத்திற்குள் வந்துள்ளனர். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் கதையை மேம்படுத்தி உள்ளனர். நடிகர் கண்ணா ரவிக்கு இந்தப் படம் திருப்பு முனையாக இருக்கும்.இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
நடிகர் ஹரிஷ் பேசியதாவது…..
இந்தப் படக்குழு என்னை அரவணைத்துக் கொண்டார்கள். இது போன்ற குழுவுடன் பயணித்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் ரஃபிக் அவர்கள் கதையைக் காட்சியாகக் கடத்தும் விதம் என்னை பிரமிக்க வைத்தது.இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
நடிகர் ஆறுபாலா பேசியதாவது……
கதையின் சிந்தாந்தத்தை அதன் சாராம்சம் குறையாமல் இயக்குநர் படமாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் மிகுந்த அர்பணிப்போடு இருந்தார்.கண்ணா ரவி உடைய கடின உழைப்பு பிரமிக்க வைத்தது.இந்தப் படத்தைத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அற்புதமாக மேம்படுத்தி உள்ளனர். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.
நடிகர் கண்ணா ரவி பேசியதாவது……
இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயமோகன் சாரின் இந்தக்கதை அட்டகாசமானது. அதை இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படத்தை எடுக்க ஒப்புகொண்ட அல்லு அரவிந்த் சாருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும் என்றார்.
இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் பேசியதாவது……
ஜெயமோகன் சார் இந்தக் கதையைக் கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையைப் படமாகச் செய்ய ஆசைப்பட்டார்கள். அவர்களைத் தாண்டி எனக்கு இந்தக் கதையைக் கொடுத்தார். பல தயாரிப்பாளர்களைத் தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்குக் கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்துப் போகும் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.ஒளிப்பதிவாளர் உடைய பணி இந்தக் கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் உடைய பங்கு கதையின் போக்குடன் ஒத்துப் போயுள்ளது.இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.











