180 நாட்கள் ஒத்திகையை 7 நாட்களில் முடித்த கிஷோர் – டிராமா பட ஆச்சரியம்
மலையாள இயக்குநர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டிராமா”.
இந்தப் படத்தில், ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகப் படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ஒத்திகை நடத்தத் திட்டமிட்டிருந்தது.
நடிகர் கிஷோர் இந்த ஒத்திகையை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த காட்சிக்கான வசனங்களைப் படித்து படப்பிடிப்புத் தளத்தில் தூங்காமல் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாராம் கிஷோர்.
மேலும், படப்பிடிப்புத் தளத்தில் தனக்கான உணவை தானே சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் கிஷோர்.
சக நடிகர்களிடம் எப்போதும் நட்போடு பழகும் பழக்கம் கொண்ட கிஷோர், இப்படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும் நடிப்பைக் கற்றுக் கொடுத்து படப்பிடிப்பில் ஒரு ஆசானாக விளங்கியிருக்கிறார்.
டிராமா படத்தை தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் கிஷோர்.
சசிகலா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் இந்தப் படம் செப்டம்பர் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.











