சினிமா செய்திகள்

விஜய் வாங்கிய புதுவீடு – விலைகேட்டு விழிவிரியும் திரையுலகம்

நடிகர் விஜய்க்கு சென்னை நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது. அங்குதான் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அதுதவிர அடையாறில் பெரிய அலுவலகம் ஒன்றும் வைத்திருக்கிறார்.

இப்போது அவர் புதிதாக ஒரு குடியிருப்பை வாங்கியிருக்கிறாராம்.அதுபற்றி திரையுலகில் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

காரணம் அதன்விலை.

சென்னையில் இதுவரை இல்லாத விலையாக, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு அதாவது ஒரு பிளாட் விலை முப்பத்துநான்கு கோடி. நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு வசதிகள் கொண்ட அந்த விலையுயர்ந்த பிளாட்களில் ஒன்றை விஜய் வாங்கியுள்ளாராம்.

அதைத் தனக்கான அலுவலகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.

அங்குபோய்வந்த சிலர் அதன் பிரமாண்டம் கண்டு வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது.

அதேவளாகத்தில் அதேவிலையில் இன்னொரு பிளாட்டை வாங்கியிருக்கும் பிரபலம் நடிகர் ஆர்யா.

விஜய் வீடு வாங்கியிருக்கும் அதே இடத்தில் அதேவிலையில் வீடு வாங்கும் அளவுக்கு ஆர்யாவும் வளர்ந்துவிட்டார் என்று ஆச்சரியமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விசயங்களை அறிந்த நயன்தாரா அந்தக் குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.

Related Posts