ஓடிடிக்கு போனது தனுஷ் படம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஆனால், கொரோனா காரணமாக எல்லாம் மாறிவிட்டது.
இவ்வாண்டு ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளீயிடப்பட்டது.
அதன்படி தனுஷ் 43 படத்தின் பெயர் மாறன்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளும் நிறைவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
முன்னணி இணைய நிறுவனமொன்று இப்படத்தைச் சுமார் 35 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகவும் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.











