தனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஆனால், கொரோனா காரணமாக எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போனது.
பல இடைவெளிகளுக்குப் பிறகு இம்மாதத் தொடக்கத்திலிருந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துவருகிறது.
இந்நிலையில், இன்று தனுஷின் 39 ஆவது பிறந்தநாள். இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு தனுஷ் 43 படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது.
இந்தப்படத்துக்கு மாறன் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
அண்மைக்கால படங்களிலிருந்து சற்றே மாறுபட்ட தோற்றத்தில் தனுஷ் இருக்கும் முதல்பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
தனுஷ் இரசிகர்கள் இதைக் கொண்டாடிவருகிறார்கள்.











