பா.இரஞ்சித் இயக்கும் புதிய படம்
ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் 2018 ஜூன் 7 ஆம் தேதி வெளியான படம் காலா. அப்படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை.
ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது. ஜூலை 22 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
காலா படத்துக்கும் சார்பட்டா பரம்பரை படத்துக்கும் இடையே மூன்றாண்டுகள் இடைவெளி இருந்தது. காலா வெளீயாகி ஓராண்டுக்குப் பிறகுதான் அடுத்தபட வேலைகளையே தொடங்கினார் பா.இரஞ்சித்.
ஆனால்,ஜூலை 22 ஆம் தேதி சார்பட்டா பரம்பரை வெளியாகவிருக்கிறது. அதற்குள் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் தனது அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார். கதை விவாதம் தொடங்குகிறார் என்று நினைக்காதீர்கள், படப்பிடிப்பே தொடங்கவிருக்கிறார்.
ஜூலை 17 ஆம் தேதி பா.இரஞ்சித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். இப்படம் கதாநாயகியை மையப்படுத்திய படமென்றும் சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகி துஷாராதான் புதியடத்திலும் நாயகி என்று சொல்கிறார்கள்.











