புஷ்கர் காயத்ரி எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் – திரும்பவரும் முன்னாள் நாயகி
எஸ்.ஜே.சூர்யா இப்போது சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அவரை நாயகனாக வைத்துப் புதிய படமொன்று தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.
புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் லீலை, கொலைகாரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆண்ட்ரு இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார் ஆனால் அது இணையதளத் தொடராம்.
அதில், அவரோடு ரம்யாநம்பீசன் நடிக்கவிருக்கிறாராம். அவர் மட்டுமின்றி முன்னாள் நாயகி லைலா முக்கிய வேடமொன்றில் நடிக்கவிருக்கிறாராம்.திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கு பெற்றிருந்தார் லைலா.
இத்தொடரில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
வரிசையாக நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் இணையதளத் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டதர்குக் காரணம் அதன் திரைக்கதை மட்டுமே என்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யாவை மனதில் வைத்து மிகவும் ரசித்து இந்தத் திரைக்கதையை ஆண்ட்ரு உருவாக்கினாராம்.
கதை கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போனதால் நீங்கள் கேட்கும் தேதிகளைக் கொடுக்கிறேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.











