சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
இன்று காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயான அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.
இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி என்பவர் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் இந்தப்படத்துக்கு டான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
டான் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.











