சினிமா செய்திகள்

ஏவிஎம் நிறுவனத்தையே கோபப்படுத்திய இயக்குநர்

2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கத் தயாரானது.

ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஏவிஎம்மின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அருணாகுகன் மற்றும் அபர்ணாகுகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிப்பைக் கவனிக்கவிருக்கின்றனர்.

அந்த இணையதளத் தொடரை இயக்க தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வாவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.

செப்டெம்பர் மாதமே இதற்கான வேலைகளைத் தொடங்க இயக்குநரைக் கேட்டுக் கொண்டதாம் தயாரிப்பு நிறுவனம்.

இயக்குநரும் திரைக்கதை உருவாக்க வேலைகளில் ஈடுபட்டிருந்தாராம்.

மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இயக்குநர் தொடங்கிய நிலையிலேயே இருந்தாராம்.

இதனால் கோபமான தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் சும்மா உட்கார்ந்ததற்குச் சம்பளத்தையும் கொடுத்து அனுப்பிவிட்டதாம்.

இப்போது அந்தத் தொடரை இயக்க வேறு இயக்குநர் தேடல் நடந்து கொண்டிருக்கிறதாம்.

ஏவிஎம் நிறுவனம் எப்போதுமே படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்ளும். அவர்களையே இவர் கோபப்படுத்திவிட்டார் என்கிறார்கள்.

Related Posts