சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் கோவை விநியோகஸ்தர் யார்? – தயாரிப்பாளர் விளக்கம்

ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் முருகானந்த்ம் நேர்காணல் நேற்று நம் இணையதளத்தில் வெளியானது.

அதில்…நீங்கள் வாங்கி வெளீயிடும் படங்கள் மற்றும் விநியோகம் செய்யும் படங்கள் எவை? என்ற கேள்விக்கு,
மாஸ்டர் படத்தின் கோவை வெளியீட்டு உரிமை பெற்றிருக்கிறோம்.பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர்த்து தமிழக உரிமை பெற்றிருக்கிறோம் என்று சொல்லியிருந்தார்.

அதனையொட்டி,

மாஸ்டர் பட வெளியீடு தாமதமாகிறதே. அதனால் பொருளிழப்பு ஏற்படும் அல்லவா? என்ற கேள்விக்கு

இந்த விசயம் தொடர்பாக தயாரிப்பாளர் லலித்குமார் அக்கறையுடன் இருக்கிறார். யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் செய்துகொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

என்று பதில் சொல்லியிருந்தார் முருகானந்தம்.

இதற்கு மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது….

மாஸ்டர் படத்தின் கோவை வெளீயீட்டு உரிமை ராஜமன்னார் அவர்களின் கந்தசாமி சினி ஆர்ட்ஸ் நிறுவனம்தான் பெற்றிருக்கிறது. அந்நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். முருகானந்தம் அவர்களுக்கும் மாஸ்டர் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருடன் எவ்வித ஒப்பந்தமும் எங்களுக்கு இல்லை

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts