சினிமா செய்திகள்

சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி திடீர் அறிவிப்புக்கு ரஜினி காரணமா?

2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியானது ‘சண்டக்கோழி’ படம். இப்போது ‘சண்டக்கோழி 2’ உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடிக்கிறார்.

இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இந்தத் தேதியில் படத்தை வெளியிடுவதற்காகப் பெற்ற அனுமதிக் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்போது உள்ள நடைமுறையின் படி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பிறகுதான் வெளியீட்டுத்தேதி பற்றி முடிவு செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் விஷாலுக்கு மட்டும் அனுமதி கொடுத்தது எந்த அடிப்படையில் என்னும் கேள்வி எழுந்திருக்கிறது.

அடுத்து, படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் வெளியீட்டுத் தேதியை அவசரமாக அறிவித்தது எதனால்? என்ற கேள்வியும் வந்திருக்கிறது.

இரண்டாவது கேள்விக்கு விடை இருக்கிறது.

அண்மையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2ஓ படத்தை எப்போது வெளியிடுவது என்கிற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

அப்போது ஆகஸ்ட் 15 அல்லது அக்டோபர் 18 ஆகிய தேதிகளில் ஏதாவதொன்றில் படத்தை வெளியிட முடிவு செய்தார்களாம். ஆகஸ்ட் 15 இல் முடியாது அக்டோபரில் வெளியிடலாம் என்று அவர்கள் பேசிய விசயம் தெரிந்துதான் விஷால் அவசரமாக அவர் படத்தை அறிவித்தார் என்கிறார்கள்.

Related Posts