சினிமா செய்திகள்

விஜய்யின் அடுத்த படம் பற்றி உலவும் புதிய செய்தி

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் முடிவாகியிருக்கிறது.

அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஊரடங்கு முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு அந்த அறிவிப்பு வரக்கூடும்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டிருப்பதாகச் செய்திகள் உலாவருகின்றன.

விஜய்யை வைத்து மெர்சல் படத்தை அந்நிறுவனம் எடுத்தது. அப்படம் பெரிய வெற்றி என்று சொல்லப்பட்டாலும் அந்நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.

இதனால் அந்நிறுவனத்துக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு படம் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.

அப்படத்தை பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், இதற்கு வாய்ப்பே இல்லை, விஜய் அப்படியெல்லாம் ஒரு படம் தொடங்குமுன்பே இன்னொரு படம் பற்றி முடிவெடுக்கமாட்டார் என்றும் சொல்கிறார்கள். 

Related Posts