சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் இப்படி செய்யலாமா? – விஜய் கோபம்

2012 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த போடாபோடி, 2015 ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான், 2018 சனவரியில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன்.

இவர் இயக்குநர் என்பதைவிட நயன்தாராவின் காதலர் என்பதால் அதிகம் அறியப்பட்டவர்.

இவருக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் இன்னும் அமையவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இப்போது விஜய்யின் அடுத்த படத்துக்கான இயக்குநரை முடிவு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில், அடுத்து விஜய் படத்தை தான் இயக்கப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே விக்னேஷ்சிவன் இப்புகைப்படத்தை வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் விஜய் கோபமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கடந்த சனவரியில் வேறொரு விசயத்துக்காகச் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை ஐந்து மாதங்கள் கழித்து இப்போது வெளியிட்டது எதற்காக? என்று விஜய் கடிந்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.

விக்னேஷ்சிவனுக்கு ஏன் இந்த வேலை?

Related Posts