செய்திக் குறிப்புகள்

ஜுங்கா என்றால் என்ன? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து, ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் படம் ஜுங்கா.

விஜய்சேதுபதி, சாயிஷா, மடானோ, யோகிபாபு, சரண்யாபொன்வண்ணன், சுரேஷ்மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கஷ்மோரா ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன்,எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், டி.சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில்,

இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.

ஜுங்கா என்றால் என்ன? என்று கேட்கிறீர்கள், படத்தில் என் தாத்தா பெயர் டிங்கா, அப்பா பெயர் ரங்கா என் பெயர் ஜுங்கா. எனவே இந்தப் பெயர். பெயர் ஏன் இப்படி அமைந்தது என்பதைப் படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி சொல்லமுடியாது என்றார் விஜய்சேதுபதி.

Related Posts