சினிமா செய்திகள்

தள்ளிப்போனது விக்ரமின் கோப்ரா – காரணம் என்ன தெரியுமா?

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துவருகிறார்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜூன் 27,2022 இரவு, ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், இப்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி அப்படம் வெளியாகாது என்கிறார்கள். அதனால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கார்த்தி நடித்த விருமன் படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.

கோப்ரா தள்ளிப்போக என்ன காரணம்?

படத்தின் இயக்குநர் அஜய்ஞானமுத்து இன்னும் முழுமையாகப் படத்தொகுப்பே செய்யவில்லையாம். அவர் முடித்துக் கொடுத்தால்தான் ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை சேர்க்கமுடியும். இயக்குநரே இன்னும் தரவில்லை எனும்போது இசையமைப்பாளர் என்ன செய்யமுடியும்?

அதனால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி படம் தயாராக வாய்ப்பே இல்லை என்றானதால் வெளியீட்டைத் தள்ளிவைத்துவிட்டார்களாம்.

இயக்குநர் மீது தயாரிப்பாளர் லலித்குமார்,ரெட்ஜெய்ண்ட் நிறுவனத்தினர் உட்பட அனைவரும் கொலைவெறியில் இருக்கிறார்களாம்.

Related Posts