சினிமா செய்திகள்

விஷால் படத்தின் விற்பனை விலை இவ்வளவா? – வியப்பில் திரையுலகம்

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் சனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை சுப்பையா சண்முகம் பெற்றுள்ளார். இவர் சிம்புவின் மாநாடு படத்தை வாங்கி வெளியிட்டவர்.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை விலை சுமார் பத்தரை கோடி என்று சொல்லப்படுகிறது. விஷால் ஆர்யா ஆகிய இருவர் நடிப்பில் வெளியான எனிமி படத்தின் திரையரங்க வசூலில் தயாரிப்பாளரின் பங்காக வந்த தொகை சுமார் ஆறரைக்கோடி எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை பத்தரைக்கோடிக்கு சுப்பையா சண்முகம் வாங்கியிருப்பது திரையுலகில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து இந்தப்படத்தை வாங்கியிருப்பதன் காரணம் இப்படத்தின் மீதான நம்பிக்கைதான் என்கிறார்கள்.

Related Posts