விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதி – புதியபடம் இன்று தொடக்கம்
விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.
விஜய் 64 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது.அதைத் தொடர்ந்து இன்றே படப்பிடிப்பும் தொடங்கவிருக்கிறதாம்.
இதையொட்டி தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள வடிவமைப்பில் விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதி படமும் இடம்பிடித்திருக்கிறது.
இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.











