விஜய்சேதுபதி பட இயக்குநரின் வேதனை
எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசக்கிதுரை என்பவர் தயாரித்துள்ளார்.
இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.
இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு….
அன்பார்ந்த face book நண்பர்களுக்கு…
மன்னிக்கவும்…
இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும்ஊரேயாவரும்கேளிர் #YaadhumOoreYaavarumKelir
படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.
இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை.
அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்குத் தெரியாது. கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.
திரும்பவும் மன்னிக்கவும்.
நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றிப் பேசாமல் மௌனமாகக் கடந்து போகிறேன்.
உண்மையில் இந்தப் படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக் கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது.
தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படைக் காரணம் பற்றிக் கேட்டிருக்கிறேன்.
தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












