வலிமை திரையரங்கு சொன்ன பொய் உடனே அம்பலப்படுத்திய மக்கள்
பெரும் எதிர்பார்ப்புடன் பிப்ரவரி 24 அன்று வெளியானது அஜீத்தின் வலிமை படம்.அன்று அதிகாலை முதலே படம் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது.
அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பதும் பரவத் தொடங்கிவிட்டது.அதனால் முதல்நாளன்றே மாலைக்காட்சிகளில் கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது என்கிறார்கள்.
முதல்நாளில் மட்டும் மொத்தமாக 35 கோடி வசூல் என்று படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டது.
உண்மையில் முதல்நாள் பதினைந்து கோடிதான் வசூலாகியிருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இரண்டாம் நாளான பிப்ரவரி 25 அன்று காலை மற்றும் மதியக்காட்சிகளுக்குக் கூட்டமே இல்லையாம். மொத்தமாகக் கூட்டம் குறைந்து திரையரங்குக்கு ஐம்பது பேர் அறுபது பேர் படம் பார்த்திருக்கிறார்கள்.
பொதுவாக இரண்டாம்நாள் கூட்டம் குறையும் என்றும் சனி ஞாயிறு நன்றாக இருக்கும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் சனிக்கிழமையும் கூட்டம் அதிகரிக்கவில்லை. ஒரு சில ஊர்களில் மட்டும் கூட்டம் இருந்தது அதுவும் திரையரங்கு நிரம்புமளவுக்கு இல்லை என்கிறார்கள்.
இதற்கிடையே, திருநெல்வேலி ராம் முகூர்த்தம் சினிமாஸ் திரையரங்குக்காரர்கள், வலிமை படத்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒன்றரை மணிக்காட்சி திரையிடப்படுகிறது என்று அறிவித்திருந்தார்கள்.
உடனே, அத்திரையரங்கின் இணையதள முன்பதிவு படத்தைப் போட்டு, பாதி திரையரங்குக்கு மேல் காலியாக இருக்கிறது,உண்மை இப்படி இருக்க பொய்யான விளம்பரம் எதற்கு? என்று வறுத்தெடுக்கிறார்கள் மக்கள்.











