தனுஷின் மாறன் வெளியீட்டுத் தேதி உறுதியானது
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படம் சனவரி 14 பொங்கல்நாளிலேயே வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் பிப்ரவரி தொடக்கத்தில் வெளியாகும் என்றார்கள். அதற்கும் பிறகு பிப்ரவரி 18, 25 என தேதிகள் மாறிக்கொண்டேயிருந்தன.
இப்போது படத்தை வெளீயிடும் தேதியை இறுதிசெய்துவிட்டார்களாம்.
மார்ச் 11 ஆம் தேதி இப்படம் வெளியிடப்படவிருக்கிறதாம்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
அதற்கு முன்னோட்டமாக படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிடவிருக்கிறார்கள்.முன்னோட்ட வெளியீடு அறிவிப்பை தனுஷ் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவருகிறார்கள்.











