சினிமா செய்திகள்

தலைவி படத்தில் உண்மைக்குப் புறம்பாக கலைஞரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் – அதிரவைக்கும் பதிவு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தலைவி. அப்படத்தின் இரண்டாம் பார்வை ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நேற்று வெளியானது.இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்த எழுத்தாளர் இயக்குநர் அஜயன்பாலா மிக வருத்தத்துடன் எழுதியிருப்பதாவது….

சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதராமாக பயன்படுத்திக்கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்படக் காரணம்.

பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக்கொண்டேன். இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆய்வு, எழுத்து தொடர்ந்து பல்வேறுகட்டங்களில் திரைக்கதை விவாதம் என என் ஒன்ன்ரை வருட உழைப்புக்குக் கிடைத்த பலன் முதுகு குத்தல் தான்.

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன் அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய் அடுத்த நாள் எனக்குக் கிடைக்கப்போகும் அவமானத்தை எண்னி அகமகிழ்ந்திருப்பார் போல.

இப்படி எழுதியதால் எனக்கு முறையாகச் சேரவேண்டிய சம்பள பாக்கி கொடுக்க மாட்டர்கள். நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம் இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Related Posts