November 10, 2026
Home Posts tagged Yogi Babu (Page 7)
சினிமா செய்திகள்

ஏப்ரல் 5 யோகிபாபு திருமண வரவேற்பு – தமிழக முதல்வர் சொன்னது என்ன?

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். 05.02.2020 அன்று யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் தீடீரென இரக்சியமாக நடந்ததால் திருமண
விமர்சனம்

டகால்டி – திரைப்பட விமர்சனம்

மும்பையில் சின்னச் சின்ன தப்புகளைச் செய்துகொண்டிருக்கும் சந்தானம், பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைக் கடத்தும் வேலையை ஒப்புக்கொள்கிறார். சொன்னபடி கடத்தினாரா? கடத்தும்போது என்னவெல்லாம் நடந்தது என்பதைச் சிரிப்புடன் சொல்வதுதான் டகால்டி. சந்தானம் படத்துக்குப்படம் மெருகேறுகிறார். மிக எளிதாக வேடத்துக்கேற்ற நடிப்பைக் கொடுக்கிறார். நகைச்சுவை, நடிப்பு ஆகியனவற்றைத் தாண்டி
செய்திக் குறிப்புகள்

கடைசி விவசாயி படத்தில் விஜயசேதுபதி யோகிபாபு எதற்கு? – மணிகண்டன் விளக்கம்

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம், நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து வெற்றி கொடுக்க முடியும் என  நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதன் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் ‘கடைசி விவசாயி’.
சினிமா செய்திகள்

தர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம். டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில்
செய்திக் குறிப்புகள்

யோகிபாபுவுக்குப் பதவி உயர்வு

யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வரும் இணைந்து நடிக்கும் படம் “காவி ஆவி நடுவுல தேவி”. இப் படத்துக்கு வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார். மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளதாம். இப்படத்தில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு
செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கிறது ஜாம்பி – படக்குழு பெருமிதம்

மோ படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருக்கும் படம் ஜாம்பி. எஸ் 3 பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 21) மாலை நடைபெற்றது. நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது,… ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில்
விமர்சனம்

கொரில்லா – திரைப்பட விமர்சனம்

காலையில் மாநகரப் பேருந்துகளில் திருட்டு, பகலில் மருந்துக்கடையில் வேலை, மாலையில் மருத்துவர் தொழில் என்று இருக்கும் நாயகன் ஜீவா, ஆட்குறைப்பு காரணமாக வேலை இழந்த சதீஷ், திரைப்பட நடிகர் ஆசையில் இருக்கும் விவேக் பிரசன்னா, வறுமையில் தற்கொலை முடிவுக்குச் சென்று திரும்பிய விவசாயி மதன்குமார் ஆகியோரோடு நாயகன் ஜீவாவின் குழந்தை போல இருக்கும் காங் என்று அழைக்கப்படுகிற சிம்பன்சி இவர்கள்
விமர்சனம்

தர்ம பிரபு – திரைப்பட விமர்சனம்

தமிழில் அவ்வப்போது வெளியாகும் அரசியல் நையாண்டிப் படங்களின் வரிசையில் சேரக்கூடிய வகையில் வந்திருக்கிறது தர்மபிரபு. சமகால அரசியல் நிகழ்வுகளை எமலோகத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். எமதர்மராஜாவாக இருக்கும் ராதாரவி, பல்லாயிரம் ஆண்டுகள் ராஜாவாக இருந்ததில் சோர்வாகி தனக்கு அடுத்து, தன் அமைச்சரவையில் இருக்கும் வெறொருவரை எமதர்மராஜாவாக நியமிக்க