October 12, 2026
Home Posts tagged WebSeries
செய்திக் குறிப்புகள்

விலங்கு வெற்றியால் இரசிகர்களுக்கு வாரண்ட் – குழுவினர் உற்சாகம்

விமல் நடித்த விலங்கு இணையத்தொடர் மற்றும் சூரி நடித்த மாமன் படம் ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராகியிருக்கிறார். அவர், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இணையத் தொடர் வாரண்ட். இந்தத் தொடரின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ்,விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து
செய்திக் குறிப்புகள்

துஷாரா விஜயன் ஹீரோ அதிதிபாலன் வில்லன் – விவரம்

தேசியவிருது வென்ற இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள எக்ஸாம் (EXAM) இணையத் தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாகத் தயாராகி இருக்கும் இந்த இணையத்தொடர் 2026 மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான இந்த இணையத் தொடரின் முன்னோட்ட
விமர்சனம்

காக்கி சர்க்கஸ் – இணையத் தொடர் விமர்சனம்

வெளியில் திருடினால் சிறையில் தள்ளுவார்கள்.சிறையிலேயே திருடினால் என்ன செய்வார்கள்? என்கிற சுவையான கேள்வியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். சிறைக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது.அதன் உண்டியல் பணம் திருட்டுப் போகிறது.அதனால் பதறும் சிறைக்காவலர் அந்த விசயம் வெளியே தெரியாமல் இருக்க கடன் வாங்கி அந்தப்பணத்தை வைக்க முயல்கிறார்.அந்தப்பணமும்
விமர்சனம்

லோக்கல் டைம்ஸ் – இணையத் தொடர் விமர்சனம்

உலகெங்கும் அச்சு ஊடகங்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கிற காலகட்டம் இது. அவற்றை நடத்தியவர்கள் மற்றும் இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் அதை ஒரு வியாபாரமாக எண்ணாமல் அதை ஒரு சமுதாயத் தொண்டாக எண்ணி, நாம் ஆற்றியாக வேண்டிய கடமை என்றெண்ணித்தான் நடத்துகிறார்கள். ஒவ்வொரு இதழும் அச்சாகி வரும்போது அதைப் பார்க்கும்போது அவர்கள் கண்களிலும் முகத்திலும் தெரியும்
செய்திக் குறிப்புகள்

வெற்றிவிழாவில் மன்னிப்பு கேட்ட இயக்குநர் – தடயம் இணையத்தொடர் நெகிழ்வு

பிப்ரவரி 27,2026 அன்று இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 (ZEE 5) தளத்தில், வெளியான தமிழ் நேரடி இணையத் தொடர் “தடயம்”,இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடரில், சமுத்திரகனி,சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1990 களின் இறுதிக்கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்தத்தொடர், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும்
விமர்சனம்

ஐந்தாம் வேதம் – இணையத் தொடர் விமர்சனம்

இந்து மதத்தில் ரிக், சாம, யஜுர் மற்றும் அதர்வ ஆகிய நான்கு வேதங்கள் இருக்கின்றன.இந்நிலையில் இன்னொரு வேதம் அதாவது ஐந்தாவதாக ஒரு வேதம் இருக்கிறது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எப்படிப் பட்டவை? என்கிற கற்பனையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ஐந்தாம் வேதம். ஒரு பழமையான ஆலயத்தில் இரகசிய இடத்தில் அந்த வேதம் இருக்கிறது.அது வெளிவரக் காத்திருக்கிறார் அக்கோயில்
சினிமா செய்திகள்

சிக்கலில் விஜய்சேதுபதி நடிக்கும் இணையத்தொடர் – விவரங்கள்

வரிசையாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இணையத்தில் மட்டும் வெளியிடுவதற்கென்றே எடுக்கப்படும் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடக்கத்தில் இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்த அவர் தற்போது தமிழில் தயாராகும் இணையத் தொடரில் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொடரை, ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய
சினிமா செய்திகள்

சசிகுமார் இயக்கும் குற்றப்பரம்பரைக்குச் சிக்கல்

தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள். வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. குற்றப்
செய்திக் குறிப்புகள்

ராதாமோகன் யோகிபாபு வாணிபோஜன் இணையும் புதியபடைப்பு தொடக்கம்

டிஸ்னி ஹாட்ஸ்டர ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,
செய்திக் குறிப்புகள்

கப்பல் ஏறிய தமிழன் – இணையத்தொடர் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

கடல் பிரிக்கும் தமிழ் இணைக்கும் எனும் முழக்கத்துக்கேற்ப சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்காகத் தயாராகும் இணையத்தொடரின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. இது அங்குள்ள வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும். இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் பணியாற்றிய கே.எஸ்.ஐ.சுந்தர் இயக்கும் இத்தொடரின் பெயர் கப்பல் ஏறிய தமிழன். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த விஜே ஜெய்ணேஷ் கதாநாயகனாக