2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் சுதாகொங்கரா. அப்படம் ஓடாததால் அடுத்த படம் எடுக்கப் பெரும் இடைவெளி. 2016 ஆம் ஆண்டு அவருடைய அடுத்த படமான இறுதிச்சுற்று வெளியானது. பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து அந்தப்படத்தையே இந்தியில் எடுத்தார்.
இந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகள் என்றால் அது, தேசிய திரைப்பட விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்தத் திரைப்படத்தை இந்தியில் எடுக்கும் பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாகத் தயாரிக்கும் இந்தித் திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது.
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்ய 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரை போற்று. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனமும், அபூன்டான்டியா
சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது. ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன்
அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு முடிவெடுக்கக் காரணம் என்ன? சனவரி மாதத்தில் சூரரைப் போற்று தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குப் போகவிருக்கிறது என்று சொன்னார்கள்.
உலக அளவில் திரைத்துறையினர் அனைவரும் பெற நினைக்கும் விருது ஆஸ்கர் விருது. தமிழ்த்திரையுலகினருக்கும் ஆஸ்கர் விருது மேல் ஆசை. இங்கு இதுவரை கமல் மட்டுமே ஆஸ்கர் பற்றிப் பேசிவந்தார். அதனாலேயே அவரை ஆஸ்கர் நாயகன் என்று அவரது இரசிகர்கள் போற்றுவார்கள்.ஆனால் அவருடைய படங்கள் ஆஸ்கர் போட்டிக்குக் கூடப் போனதில்லை என்றும் சொல்வார்கள். இப்போது சூர்யா நடித்த சூரரைப் போற்று தமிழ்த்
துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்தச் செய்தி கசிந்து பல மாதங்கள் ஆகியும் இருவர் தரப்பிலிருந்தும் ஆமோதிப்போ எதிர்ப்போ வரவில்லை என்பதால் அதுதான் நடக்கவிருக்கிறது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகச்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. நேரடியாக இணையதளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தப் படத்தைத் தயாரித்த சூர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம். தயாரிப்பாளராக பெரிய இலாபம் சம்பாதித்ததோடு படம் வெளியான பின்பு அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சிதாம்
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேசமயம் அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் இவர்தான் என்று பல பெயர்கள் சொல்லப்பட்டுவருகின்றன. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பேட்டி ஒன்றிலிருந்து சுதா கொங்கரா அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்கிற தகவல்



















