மாமியார் மருமகள் சண்டை உலகப்பிரசித்தம். அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்று எண்ணியதன் விளைவு எல்ஜிஎம். இதை உயர்நடுத்தர வர்க்கப் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன ஹரீஷ்கல்யாணுக்கு நாயகி இவானா மீது காதல். அவரும் இவரை விரும்புகிறார். அதேசமயம்,
இந்திய ஒன்றியத்தின் முதன்மை மட்டைப்பந்து வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் இணைந்து, ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். அந்நிறுவனம் சார்பாக தயாரித்து இருக்கும் திரைப்படம் எல்ஜிஎம் (LET”S GET MARRIED). எல்ஜிஎம் திரைப்படம் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த குடும்பத்தோடு கண்டு இரசிக்கக் கூடிய
தாராள பிரபு, ஓமணப்பெண்ணே ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, எல்ஜிஎம், பார்க்கிங்,லப்பர்பந்து ஆகிய படங்களோடு அதிரடிப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் டீசல் ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் ஹரீஷ்கல்யாண். இவற்றில் டீசல் படத்தை அடங்காதே பட இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இப்படத்தை தர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் (Third Eye Entertainment) சார்பில் எம்.தேவராஜுலு
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை இன்று (மார்ச் 3,2023) நடைபெற்றது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய
ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க,சாய்குமார்,கருணாஸ், வினய் ராய், அன்னையா,அருண் பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா,தீனா (தினேஷ்), தங்கதுரை, லட்சுமி சங்கர்,தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார்.சச்சின், ரமேஷ் திலக், செல்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை சொல்லிப் புகழ்பெற்றவர் தங்கதுரை.பொதுவாக எதிர்மறை எண்ணம் தரும் பழைய ஜோக் என்பதையே தமக்கான நேர்மறை எண்ணமாக்கி பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறார். அண்மையில் வெளியான சூர்யாவின் எதற்கும்துணிந்தவன் படத்தில் சிறிய வேடமென்றாலும் பெரிய கவனம் பெற்றார். அவரிடம் ஒரு பேட்டி…. 1.எதற்கும் துணிந்தவன் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புப்
ஹரீஷ்கல்யாண் இப்போது இயக்குநர் சசி இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாம். முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடையும்வரை அப்படம் குறித்து எவ்விதத் தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வந்திருக்கின்றனர். இப்போது படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் அவையும் முடிவடையும் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் பெல்லிசூப்புலு. பெரியவெற்றி பெற்ற அந்தப்படத்தில் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் அக்டோபர் 22 ஆம் நாள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே. அப்பட வெளியீட்டுக்குப் பின் அதன் இயக்குநர் கார்த்திக் சுந்தருடன் ஓர் உரையாடல்…. 1. பட வெளியீட்டுக்குப் பின் வரவேற்புகள் எப்படி இருக்கின்றன? நிறையப்
கவசம், சதியாடல், தப்பாட்டம்,பந்தயம், அறம் பற்ற, அக்கற ஆகிய ஆறு தலைப்புகளில் தனித்தனிக் கதைகள் அவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ஒரே கதை. அதுதான் கசடதபற. கவசம் கதையில் பிரேம்ஜிதான் கதாநாயகன், அவருக்கு இணை ரெஜினா. இவர்களோடு யூகிசேதுவும் இருக்கிறார். இவர்கள் மூவரை மட்டும் வைத்துக் கொண்டு சுவையாகக் கதை சொல்லியிருக்கிறார் சிம்புதேவன். ரெஜினாவுக்கு பிரேம்ஜி மீது காதல் வரக்
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால்,அது நடக்கவில்லை.அதற்குக் காரணம், அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாது நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கும் படம் என்கிறார்கள். அதனால்தான் சந்தானம் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போது சந்தானத்துக்குப் பதிலாக ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே,



















