செய்திக் குறிப்புகள்

ஹரிஷ்கல்யாண் நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை இன்று (மார்ச் 3,2023) நடைபெற்றது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் எழுத்தாளரும், எஃப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான
தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார்.

லவ் டுடே படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் இந்தப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ரன் பேபி ரன் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் ஜி.மதன் படத்தொகுப்பை மேற்கொள்ள, ஷான் ரோல்டன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது.

Related Posts