நடிகராக அறியப்பட்ட அருவிமதன் இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கியுள்ள படம் நூடுல்ஸ். ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப்படத்தை அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி
நடிகர் அருண்விஜய் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 என்கிற படம் தயாராக உள்ளது. இந்தப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலா இயக்கும் வணங்கான் படம் இருக்கிறது. அந்தப்படம் பாதிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. மீதிப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. இவற்றிற்கடுத்து அருண்விஜய் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை இல்லை. அதேசமயம், மூன்று
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மிஷன்-சாப்டர் 1. இந்தப்படத்துக்கு அச்சம் என்பது இல்லையே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும்
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கதை முழுக்க முழுக்க இலண்டனில் நடப்பதுபோல் எழுதப்பட்டிருக்கிறதாம். அதனாலே
இலண்டன் மாநகரில் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள். அதற்குக் காரணம், அங்கே ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் மலையாளப்படமொன்றின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ஒன்று தொடங்கியிருக்கிறது. அந்தப்படத்தின், மொத்தப் படப்பிடிப்பும்
நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவருக்கு ஒரு காதல். திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை. நெஞ்சு நடுங்கும் அச்சோதனையை அனுபவிக்கும் அவர், அதன்பின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சினம். மீசை இல்லாத நிலையிலும் காவல்துறை உதவி ஆய்வாளர் வேடத்துக்குரிய மிடுக்குடன் இருக்கிறார் அருண்விஜய்.
மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Movie Slides Pvt. Ltd)சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் ஜிஎன்ஆர்.குமரவேலன் இயக்கத்தில்,அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “சினம்”. இப்படத்தில், காளி வெங்கட்,ஆர்.என்.ஆர்.மனோகர்,கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தலைவி. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இலண்டனில் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.ஒரு குழந்தைக்குத் தாயாக எமிஜாக்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இலண்டனிலேயே
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் படம் ‘ஓ மை டாக்’. இப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்நிலையில், ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். அந்நிகழ்வில், மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது
ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது… மிக





















