சூர்யாவின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய்பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் சேர்ந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
கே.வி.ஆனந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் இதை அறிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கலை இயக்குநராக கிரண் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்கிற தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.













