சினிமா செய்திகள்

சூர்யா 39 பட இயக்குநர் மற்றும் பெயர் – புதிய தகவல்

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம்.

அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அதுவே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஹரி சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை எனவே அந்தப்படம் நடக்காது என்கிற செய்திகள் உலவத்தொடங்கிவிட்டன.

இந்நிலையில் சூர்யா 40 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.

38 ஆவது படம் வெளியீட்டுக்குத் தயார், 40 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. 

39 என்ன ஆச்சு? என்கிற கேள்விக்கு இப்போது புதுவிடை கிடைத்துள்ளது. 

சூர்யாவின் 39 ஆவது படத்தை த.செ.ஞானவேல் இயக்கவிருக்கிறாராம். அந்தப்படத்துக்கு எலிவேட்டை என்று பெயரும் வைக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

த.செ.ஞானவேல் ஏற்கெனவே கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கியிருக்கிறார். சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் முதன்மை செயற்பாட்டாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts