சினிமா செய்திகள் நடிகை

விஷால் மீது புகார் சொன்னாரா ஸ்ரீரெட்டி? – பரபரக்கும் திரையுலகம்

தெலுங்கு திரைப்பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இருந்தது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் தனக்கு மிரட்டல் இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறி இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது.நடிகர் ராகவா லாரன்சும் தனது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

சில நாட்களாக அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது முன்னணி நடிகர் ஒருவர் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி அடுத்த அதிரடியைத் தொடங்கி இருக்கிறார். நடிகரின் பெயரைச் சொல்லாமல் முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகர் சங்கத்தில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருக்கும் ஒருவர் கதாநாயகிகளுக்கும் துணை நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கிறார். ஆனால் வெளியில் புத்திசாலித்தனமாக பேசுகிறார். அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். என்னிடமும் ஆதாரங்கள் உள்ளன.

பதவியை வைத்து பலரை மிரட்டுகிறார். அவரால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வழக்கறிஞர்கள் உதவியுடன் அந்தநடிகரின் அத்துமீறல்களை வெளியே கொண்டு வருவேன். ஜெய் ஜெயலலிதாம்மா என்று ஒரு பதிவில் கூறியிருக்கிறார்.

அடுத்த பதிவில், தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் எல்லோரும் உங்களை நம்பினர், உங்களுக்கு ஓட்டுப்போட்டனர். ஆனால் அதை நீங்கள் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்,பணத்துக்காக பல தயாரிப்பாளர்களைத் துன்புறுத்துகிறீர்கள். அவர்கள் கோபப்பட்டால் உங்கள் எம்.எல்.ஏ பதவி காலியாகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதனால் அவர் பெயர் குறிப்பிடாவிட்டாலும் அவர் விஷால் மீதுதான் குற்றம் சொல்கிறார் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.ஆனால் எம்.எல்.ஏ பதவி காலியாகும் என்று சொல்லியிருப்பதால் அவர் கருணாஸை சொல்கிறார் என்ற கருத்தும் பரவுகிறது.

யாராக இருந்தாலும் தமிழ்த்திரையுலகில் பொறுப்பில் இருப்பவர் மீது ஸ்ரீரெட்டி குற்றம் சுமத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts