அனிருத்தை நிராகரித்த செளந்தர்யா ரஜினி – விவரங்கள்
ரஜினிகாந்த்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் லால்சலாம். இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா ஒரு புதியபடத்தை இயக்கவிருக்கிறார் எனும் செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது.
இவர் ஏற்கெனவே கோச்சடையான், வேலையில்லாப்பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அதன்பின் இப்போது ஒரு புதியபடத்தை இயக்கவிருக்கிறார்.
அவர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் ராகவாலாரன்ஸ். செளந்தர்யா சொன்ன கதை பிடித்ததால் அவர் இயக்கத்தில் நடிப்பதற்குச் சம்மதம் சொல்லியிருந்தார்.
கதை பிடித்தால் மட்டும் போதாதே? சம்பளம் உள்ளிட்ட விசயங்கள் இருக்கின்றனவே.
அதுவும் இப்போது அனைவரும் திருப்தியடையும் வகையில் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
செளந்தர்யா இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றதும் அந்தப்படத்தைத் தயாரிக்க கலைப்புலிதாணு முன்வந்தாராம்.
அவரே, ராகவாலாரன்சுக்கு சுமார் முப்பதுகோடி சம்பளம் தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம். அதில் ராகவாலாரன்சுக்கும் மகிழ்ச்சி. எனவே, படத்தின் வேலைகள் வேகமாக நடக்கத் தொடங்கியிருக்கின்றன என்கிறார்கள்.
இப்போது, படத்தின் இசையமைப்பாளரை முடிவு செய்யும் பணி நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில், அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யலாம் என்று கலைப்புலிதாணு சொன்னாராம்.
இதை செளந்தர்யா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்த்தால் யாரும் எதிர்பாராத வகையில் அனிருத் வேண்டாமெனச் சொல்லிவிட்டாராம் செளந்தர்யா.
ஏன்?
ஏனெனில்? லால்சலாம் படத்துக்கு இசையமைக்க முதலில் அனிருத்தைக் கேட்டிருக்கிறார்கள். அப்போது அந்தப்படத்துக்கு இசையமைக்க அனிருத் மறுத்துவிட்டாராம்.
அதனால், அக்கா படத்தை வேண்டாமெனச் சொன்னவரை என் படத்துக்கு இசையமைக்க வைத்தால் சரியாக இருக்காது, எனவே அனிருத் வேண்டாம் என உறுதியாகச் சொல்லிவிட்டாராம் செளந்தர்யா.
அதனால், இப்போது ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவரில் யாருடைய தேதிகள் இவர்களுக்கு ஏற்றாற்போல் இருக்கிறதோ அவரை ஒப்பந்தம் செய்யலாம் என முடிவு செய்து விட்டார்களாம். இப்போது, அதற்கான வேலைகள் நடக்கிறதென்று சொல்கிறார்கள்.











