சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு அதிர்ஷ்டக்காரர், எப்படி?

சிம்பு எதைச் செய்தாலும் அதை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன் செக்கச்சிவந்தவானம் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கொண்டாடித் தீர்த்தார்கள்.

அதன்பின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், நடனமாடிய காணொலி ஆகியன இணையதளமெங்கும் நிறைந்திருந்தன.

இன்றைக்கு சிம்புவின் இரண்டு புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஏதோவொரு நடனநிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொண்டிருக்கிறார்.

அவர் கறுப்பு வேட்டியும் கறுப்புச் சட்டையும் அணிந்திருக்கிறார்.

உடனே, காலா ரஜினிகாந்த் போல சிம்பு மிரட்டுகிறார், சிம்பு ராக்ஸ் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.

வேறெந்த நடிகருக்கும் இல்லாத வகையில் சிம்புவுக்கு ரசிகர்கள் அமைந்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர் அதிர்ஷ்டக்காரர்தான்.

Related Posts