சிம்பு படத்தின் பெயர்- முதல்பார்வை- ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘மாநாடு’ படத்துக்கு முன்பாக குறுகியகாலத் யாரிப்பாக உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘
ஈஸ்வரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல்பார்வையில் முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்புவின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது. கையில் பாம்புடன் முழுக்க உடல் எடையைக் குறைத்திருக்கும் சிம்புவின் தோற்றம் அவரது இரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் படத்தில் பாரதிராஜா, மனோஜ், நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
நவம்பர் ஆறாம்தேதியுடன் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் என்கிறார்கள்.
இந்தப்படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.











