October 16, 2026
செய்திக் குறிப்புகள்

உங்கள் அனுபவங்களைச் சொன்னால் தங்கக்காசு பரிசு – கிரிஷ்ணம் படக்குழு அதிரடி

பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்துள்ள படம் க்ரிஷ்ணம். தினேஷ்பாபு என்பவர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

அக்ஷய் கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார்.

கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துத்தான் ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல இப்படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பல்ராம்தான்.

தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில்,தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் இப்படத்தை எடுத்துள்ளார்.

இப்படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
அதையொட்டி அப்படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

சினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.

அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக்,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக், ஷேர் சாட் டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் தங்கக்காசு ஐந்து நாளைக்கு ஒருமுறை வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Posts