November 5, 2025
சினிமா செய்திகள்

பிரபல மலையாள நடிகரை தமிழுக்குக் கொண்டுவரும் சீனுராமசாமி

இயக்குநர் சீனுராமசாமி இப்போது விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்துக் கூறியுள்ளார் சீனுராமசாமி. 

மாமனிதன் படத்துக்கு அடுத்து நான் ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அம்பேத்குமார் இப்போது, ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சீனுராமசாமியின் இந்தப் புதிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் பிரபல மலையாள நடிகர் ஷானே நிகம்.

Shane-Nigam

Shane-Nigam

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற கம்மாட்டிபாடம், இஸ்க், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

இவரை தமிழில் அறிமுகப்படுத்துகிறார் சீனுராமசாமி. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளில் இப்படம் தயாராகவிருப்பதாகவும் விரைவில் இப்படத்தின் ப்டப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   

Related Posts