சினிமா செய்திகள்

மகனுக்கு வில்லனானார் விக்ரம்

விக்ரம் தனது 60 ஆவது படத்தில் மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கிறார்.அவருக்கு இது இரண்டாவது படம்.ஆதித்ய வர்மா படத்துக்குப் பின் துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் விக்ரமின் வேடம் மிகவும் வேறுபட்டது என்றும் அவர் முழுநீள வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வேடம் பிடித்திருந்ததால் மகனையே நாயகனாக்கி அவருக்கு வில்லனாகிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts