January 10, 2026
சினிமா செய்திகள்

கே.பாக்யராஜை பழிவாங்குகிறாரா பி.எஸ்.மித்ரன்? – சர்தார் கதை பற்றி உலவும் தகவல்

முன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்தவுடன் இந்தக்கதை என்னுடையது என்கிற குற்றச்சாட்டுகள் வந்தன. அதன்பின் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது வெளியாகும் செய்திகளையொட்டி கதைத்திருட்டுக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு படம் அறிவிக்கும்போதே அம்மாதிரியான குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கியிருக்கின்றன.

இப்போது, குற்றச்சாட்டாக இல்லாமல் ஒரு விசயம் திரையுலகில் குறிப்பாக உதவி இயக்குநர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அது…

நேற்று, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் சர்தார் எனும் புதிய படத்தின் பெயர் மற்றும் சலனப்படம் ஆகியன வெளீயாகின.

இந்தப்படத்தை, இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ்.மித்ரன் இயக்குகிறார்.

இப்படத்தின் கதை, கே.பாக்யராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ஒரு கைதியின் டைரி படத்தை ஒத்திருக்கிறது என்கிறார்கள். அதாவது அப்பா பழிவாங்குகிறார் மகன் அப்பாவுக்கே எதிராகப் போராடுகிறார் என்கிற அடிப்படை கொண்டது என்கிறார்கள்.

இது எவ்வளவு தூரம் சரி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அதற்குள் என்னவெல்லாம் பேசப்படுகிறது தெரியுமா?

பி.எஸ்.மித்ரன் இயக்கிய ஹீரோ படத்தின் கதைத்திருட்டுச்சிக்கல் புகாராக கே.பாக்யராஜிடம் வந்தபோது, பிஎஸ்.மித்ரனுக்கு எதிராக முடிவெடுத்தார்.அது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதனால் அவரைப் பழிவாங்க அவருடைய கதையையே அடிப்படையாகக் கொண்டு படமெடுக்கப்போகிறார் என்கிறார்கள்.

உண்மை என்னன்னு தெரியுமுன்னே ஒரு விசயத்துக்கு எப்படியெல்லாம் றெக்கை முளைக்குது பாருங்க.

Related Posts