விஜய்யின் சர்காரோடு மோதத்துணிந்த இயக்குநர் பதறிய சமுத்திரக்கனி
புது இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்திருக்கும் படம் பெட்டிக்கடை. லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார்.
கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.
இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்
மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு அருள், சீனிவாஸ்,
இசை மரியா மனோகர்
பாடல்கள் நா.முத்துக்குமார்,சினேகன், இசக்கிகார்வண்ணன், மறத்தமிழ் வேந்தன்
நடனம் வின்செண்ட் ,விமல், சண்டைப்பயிற்சி மிராக்கிள் மைக்கேல், படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது…
விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சமுத்திரக்கனி, வீரா இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் மரியா மனோகர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் ஆகியோரும் பங்கு பெற்றனர்.
விழாவில் பேசிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன்…
இது எனக்கு முதல் படம். முதல் படத்தில் அழுத்தமான ஒரு பதிவைப் பதிக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கதையைத் தொட்டிருக்கிறேன். பெட்டிக்கடை என்கிற பாரம்பர்யத்தை உறவுச் சங்கிலியை உணவுப் பாரம்பர்யத்தை, சூப்பர் மார்க்கெட் என்கிற மாயை எப்படி காலியாக்கி இருக்கிறது என்கிற கருத்தை இதில் பதிய வைத்திருக்கிறேன் என்றார்.
நாயகன் சமுத்திரக்கனி பேசியதாவது…
இது ஒரு நல்ல தருணம்.நாம் கடந்து வந்த விஷயம். நாம் வேணாம்னு விட்டுட்டு வந்த விஷயத்தை இதில் எடுத்து இருக்காங்க. அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும்.அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுட்டு போறோம்னு இதில் சொல்லி இருக்கார்.
இந்த டைரக்டர் இசக்கி கார்வண்ணனைப் பற்றி சொல்லனும்னா இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே..அது மாதிரி தான்.
திடீரென்று ஒரு நாள் வந்து சர்க்கார் படத்து ரிலீஸ் தேதிக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம்ன்னார்..நான் தான் அப்படியெல்லாம் வேணாம்..நமக்குன்னு ஒரு தேதி வரும் ..அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன்…அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை அவருக்கு இவ்வாறு சமுத்திரகனி பேசினார்.











